சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கட்சி எவ்வாறானதொரு முடிவை எடுக்கும் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மைத்திரி இவ்வாறு கூறினார்.
” இவ்விவகாரம் தொடர்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை. நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. நேரம்வரும்போது முடிவெடுக்கப்படும். அமைச்சரவை மாற்றுவதால் பிரச்சினை தீருமா என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.” எனவும் மைத்திரி குறிப்பிட்டார்.










