கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ‘பெட் ஸ்கேன்’ பரிசோதனை இடைநிறுத்தப்படும் அபாயம் !

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் ‘பெட் ஸ்கேன்’ (PET) பரிசோதனைகள் இன்னும் இரண்டு வாரங்களின் பின்னர் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அரசாங்க மரபியல் விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக தர்ம விக்கிரம தெரிவித்தார்.

இந்த இயந்திரங்களைக் கொண்டு பரிசோதனை செய்யும் நிபுணர்கள் ஓய்வு பெறுவதும், நாட்டை விட்டு வெளியேறுவதுமே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ‘லினிட்டர் எக்ஸிலரேட்டர்’ இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles