மனைவியை அடித்து கொலை செய்த கணவன் – கம்பளையில் பயங்கரம்!

கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினையால் மனைவியை கணவன் தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று, உடுநுவர, வெலம்பொட – லொகு அங்க பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அமானி லக்மினி சேனாநாயக்க என்ற ஒரு பிள்ளையின் தாயான 24 வயது பெண்ணோ இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

மகியங்கனை பிரதேசத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த சந்தேக நபரின் மனைவி, வேறு ஒரு நபருடன் ஏற்படுத்தி கொண்ட தகாத தொடர்பு தெரியவந்ததையடுத்து நேற்று முன்தினம் (5 ஆம் திகதி) அங்கிருந்து வெலம்பொட பிரதேசத்திற்கு வந்து குடியேறியுள்ளனர்.

அங்கிருந்து வந்த நேரத்திலிருந்து மனைவி குழந்தையினையும் கவனிக்காது சம்பவம் இடம் பெற்ற (இன்று 6) அதிகாலைவரை தொலை பேசியில் உரையாடியவாறு இருந்ததாக தெரியவருகின்றது.

இதையடுத்து கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினையடுத்து ஆத்திரம் கொண்ட பெண்ணின் கணவர் , கட்டையினால் மனைவியை தாக்கியதில் ஸ்தலத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

ஸ்தல விசாரணைகளை கம்பளை மாவட்ட நீதி மன்ற மேலதிக நீதவான் காந்தி லதா மேற்கொண்டார். மரண பரிசோதனைகளுக்காக சடலம் கண்டி வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கம்பளை நிருபர்

Related Articles

Latest Articles