2022 க.பொத. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நுவரெலியா மாவட்டம், வலப்பனை கல்வி வலயத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது அருணோதயா இந்து கல்லூரி.
தேயிலை தொழிற்சாலை கட்டிடத்தில் இயங்கி வரும் இப்பாடசாலை , வளங்கள் மற்றும் மேலதிக வகுப்புகள் இன்றிய தூர பிரதேச பாடசாலையாக காணப்படுகின்றது.

சாதாரண தரத்தில் மிக சிறந்த பெறுபேறுகளை பெறும் மாணவர்கள், நகர்புற பாடசாலைகளுக்கு செல்லுவதால் சாதாரண பெறுபேறு பெற்ற மாணவர்களை கொண்டு அதிபராக பொறுப்பேற்ற டயஸ்குமாரின் ஆக்கபூர்வமான முயற்சியால் பௌதீக வளம், விளையாட்டு, தமிழ் மொழிதினம்,மாணவர்களுக்கான புலமைபரில்கள்,பாடசாலைக்கான வளங்கள் பெறுதல் போன்ற சகலதுறைகளிலும் அபரிவிதமான வளர்ச்சியை வெளிப்படுத்துகின்றது.

மேலும் இப்பாடசாலையில் முழுமையாக தொழிலாளர்களின் பிள்ளைகள் என்பது குறிப்பிடதக்கது. அதிபர், கற்பித்த ஆசிரியர்கள்,பெற்றோர்கள் உள்ளிட்ட மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.
தகவல் Ragala Ragala முகநூல் பக்கம்

