மொரோக்கோவில் பயங்கர நிலநடுக்கம்! 296 பேர் பலி!!

மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை சுமார் 296 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மராகேச் என்ற இடத்தில் இருந்து தென்மேற்கே திசையில் 44 மைல் (79 கிலோமீட்டர்) தொலைவில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் 6.9 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இரவு 11.14 மணியளவில் மக்கள் தூக்கத்தில் இருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள் நீடித்ததாக கூறப்படுகிறது. இந்த கடும் நிலநடுக்கத்தை தொடர்ந்து மொராக்காவின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகிறது.

இதுவரை சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகளை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

Latest Articles