உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரி ஒருவர் செயற்பட்டதாக முன்னாள் சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை,
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு விசாரணைகளின் நடவடிக்கைகள் நிறைவடைந்து இறுதித் தீர்மானத்திற்கு வருவதற்கு முன்னர், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை என்பன பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
