ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் அலுவலகம், தலவாக்கலை – ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை பகுதியில் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த காரியாலய திறப்பு விழாவில் ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும் , கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாச்சலம் அரவிந்தகுமார் கலந்துகொண்டார். கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்.

இதன்போது மலையக மக்கள் முன்னணியின் முனனாள் தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் உருவ படத்திற்கு மலர் தூவி பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.










