மொட்டு கட்சியின் எழுச்சிக்கு அஞ்சுகிறதாம் சர்வதேசம் – சனல் – 4 குறித்து சர்வதேச விசாரணையும் கோரல்!

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மீள் எழுச்சியால் உள்நாட்டு கட்சிகள் மட்டுமல்ல சர்வதேசமும் அஞ்சுகின்றதா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே , சனல் – 4 காணொளி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எமது கட்சியும் விடுக்கின்றது” – என்று அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எவ்வித அடிப்படையும் இன்றி சனல் – 4 ஊடாக வீடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில்தான் எமக்கு இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

2018 உள்ளாட்சி சபைத்தேர்தலின்போது மொட்டு கட்சிக்கு எல்லா பக்கங்களில் இருந்தும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனகூட, வீதிகளில் திரிய வேண்டிவரும் எனக் கூறியிருந்தார். ஆனால் அத்தேர்தலில் மக்களின் அமோக ஆணைகிட்டியது.

உள்ளாட்சிதேர்தல் முடிவு வந்தகையோடு அடுத்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் எமது கட்சி வெற்றிநடைபோடும் என்பது எமக்கு தெரியும். நிலைமை இப்படி இருக்கையில் எதற்காக வேறுவித நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்? மூளை வளர்ச்சி குன்றியவர்கள்தான் இப்படியான காரணங்களைக்கூற வேண்டும்.

சனல் – 4 காணொளி குறித்துஅரசுக்கு தேவையெனில் சர்வதேச விசாரணை நடத்தலாம். சர்வதேச விசாரணையை நடத்துமாறு எமது கட்சியும் கோரிக்கை விடுக்கின்றது. சனல் – 4வில் போலியான, திரிவுபத்தப்பட்ட தகவல்களே வெளியிடப்பட்டுள்ளன.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles