ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணத்தை முடக்கும் வகையில் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் மீண்டும் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இவ்வாறான நடவடிக்கைமூலம் மொட்டு கட்சியை வீழ்த்த முடியாது – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
” மொட்டு கட்சியோ அல்லது ராஜபக்சக்களோ குண்டு தாக்குதல்களை நடத்தி ஆட்சியை பிடிக்கவில்லை. மக்கள் ஆசியுடன்தான் ஆட்சிக்கு வந்தோம். மக்கள் எமக்கு வழங்கியை ஆணை இன்னும் இழக்கப்படவில்லை. அடுத்து தேர்தலொன்று நடைபெற்றால் மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை தெரியவரும்.” – எனவும் பஸில் ராஜபக்ச குறிப்பிட்டார்.
