முறிந்து விழுந்தது மரம் – அவிசாவளையில் ஐவர் படுகாயம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் அவிசாவளை , கிரிவன்தல பகுதியில் நேற்றிரவு பாரிய மரமொன்று வீதியில் முறிந்து விழுந்ததால் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். அத்துடன், ஆட்டோவொன்றும், ஸ்கூட்டியும் சேதமடைந்துள்ளன.

ஆட்டோவில் பயணித்த மூவரும், ஸ்கூட்டி மோட்டர் சைக்கிளில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாகவே இடம்பெற்றுவந்தது. அதன்பின்னர் மரம் அகற்றப்பட்டது.

க.கிஷாந்தன்

Related Articles

Latest Articles