தேயிலை தூள் களவாடிய எழுவர் கைது!

அக்கரப்பத்தனை ஹோல்புறூக் பிரதேசத்தில் இயங்கும் தேயிலை தொழிற்சாலையில் 1500 கிலோ தேயிலை தூளை களவாடி விற்ற 7 பேர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேயிலை தொழிற்சாலையில் ஏற்றுமதி செய்வதற்காக பொதி செய்யப்பட்டிருந்த தேயிலை தூளினை லொறியில் ஏற்றி வெளியில் கொண்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தொழிற்சாலை முகாமையாளருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

கிடைத்த தகவலை முகாமையாளர் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த லொறியும் களவாடப்பட்ட தேயிலைத் தூளையும்.
கைப்பற்றியதோடு சம்பவம் தொடர்பாக ஏழு பேரையும் கைது செய்தனர்.

Related Articles

Latest Articles