தொழிலாளர் குடும்பத்தினர் எதிர்கொண்ட அழுத்தங்கள் ஐக்கிய மக்கள் முன்னணியின் தலையீட்டில் தீர்வு

குடியிருப்பொன்று இல்லாத நிலையில் பதுளை ஹாலி-எல ரொசட் தோட்டத்தின் முதலாம் பிரிவைச் சேர்ந்த தொழிலாளர் (3பிள்ளைகளுடன்) குடும்பத்தினர் நிர்வாக ரீதியாகவும் பொலிஸ் தரப்பிலும் எதிர்கொண்ட அழுத்தங்கள் தொடர்பில் தலையீடு செய்த ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாச்சலம் அரவிந்தகுமார் குறித்த தொழிலாளர் குடும்பத்தின் வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொள்வதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

இதன் பயனாக குறித்த தொழிலாளர் குடுப்பத்தினர் தங்களுக்கு நிரந்தர வீடு
ஒன்றை அமைத்துக் கொள்வதற்கான பணிகளை ஆரம்பித்ததுடன் அண்மையில் அடிக்கல் நாட்டு பூஜைகளும் இடம்பெற்றன.

மூன்று பிள்ளைகளைக் கொண்ட மேற்படி தொழிலாளர் குடும்பத்தினர்
குடியிருப்ப தற்கு வீடு இன்மையால் தற்காலிக குடில் ஒன்றை அமைத்துள்ளனர்.

எனினும் தோட்ட நிருவாகம் இதற்கு அனுமதி மறுத்து எதிர்ப்பு தெரிவித்து
பொலிஸ் நிலையத்திலும் புகார் செய்தது. அது மாத்திரமன்றி குறித்த குடிலை
அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதுடன் தொழிலாளிக்கு வேலையும் இடைநிறுத்தப்பட்டது.

இச்சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரொசட் தோட்டத்தின் 3 பிரிவுகளைச்
சேர்ந்த தொழிலாளர்கள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர். இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய தொழிலாளர் முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள்
முன்னணி ஆகியவற்றின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாச்சலம் அரவிந்தகுமாரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து இராஜாங்க அமைச்சர் இவ்விடயத்தில் தலையீடு செய்ததுடன் அவரது பணிப்புரைக்கமைய தொழிலா ளர் ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தேசிய
அமைப்பாளர் ஆனந்தராஜா பாபு குறித்த தோட்ட நிருவாகத்துடன் நடத்திய
பேச்சுவார்த்தையின் பயனாக தற்காலிக குடிலை அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
மேலும் தொழிலாளிக்கு எதிரான பொலிஸ் முறைப்பாடும் தோட்ட நிருவாகத்தினால் வாபஸ் பெறப்பட்டது.

இதேவேளை தொழிலாளிக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டதுடன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 3 பிரிவுகளையும் ‍சேர்ந்த தொழிலாளர்களும் மீண்டும் வேலைக்கு திரும்பினர்.

குறித்த தொழிலாளிக்கு நிரந்தர வீடு ஒன்றை அமைப்பதற்கு 3 மாத
காலத்துக்குள் அனுமதியைப் பெற்றுக்கொடுக்குமாறு தோட்ட நிருவாகத்துக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.

அதற்கமைவாக 3 மாத கால முடிவில் தொழிலாளி
நிரந்தர வீடு அமைப்பதற்கு அனுமதிக்கப்பட்டதுடன் பணிகளும்
ஆரம்பிக்கப்பட்டு அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

இவ்விடயத்தில் துரிதமாகவும் ஆக்கூர்வமாகவும் செயற்பட்டு பாதிக்கப்பட்ட
தொழிலாளிக்கு நியாயத்தை பெற்றுத்தந்த கல்வி இராஜாங்க அமைச்சர்
அருணாச்சலம் அரவிந்தகுமாருக்கு தோட்ட மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

எம். செல்வராஜா, பதுளை

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles