யாழ். ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்க திட்டம்?

மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் (2010 – 15) யாழில் நிர்மாணிக்கப்பட்ட யாழ். ஜனாதிபதி மாளிகை வளாகம், குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது.

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கே SLIIT இவ்வாறு குத்தகைக்கு வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி மாளிகை வளாகம் காங்கேசன்துறையில் 29 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதில் 12 ஏக்கரில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
எஞ்சிய பகுதி, அப்பகுதி மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட காணியை உள்ளடக்கியுள்ளது.

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகருமான சாகல ரத்னாயக்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது, முழு இடத்தையும் குத்தகைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அரசுக்கு சொந்தமான 12 ஏக்கரை முதற்கட்டமாக SLIIT நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது.

மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட எஞ்சிய 17 ஏக்கர் காணியை அம்மக்களுக்கு வருமானம் கிடைக்க வழிவகுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மேற்படி நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது.

குறித்த காணி தற்போது கடற்படையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. குத்தகை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், நிறுவனத்திடம் கையளிக்கப்படும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles