பிணைக்கைதிகளை முழுவதுமாக விடுவித்த பின்னரே ‘போர் நிறுத்தம்’ குறித்து பேச்சு

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இரு நாடுகள் தீர்வை அமெரிக்க அதிபர் பைடன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அமைதியை ஏற்படுத்துவது அவசியம். பிரச்னைக்கு சுதந்திரமான இரு நாடுகள் என்ற தீர்வை ஒருபோதும் விட்டுக் கொடுக்க இயலாது.

இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் என இருதரப்பினரும் பாதுகாப்போடு அமைதியாக வாழ வேண்டியவர்கள். பிணைக்கைதிகளை முழுவதுமாக விடுவித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து விரிவாக விவாதிக்க முடியும்” என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் தங்கள் பிடியில் இருந்து மேலும் இரு பிணைக்கைதிகளை விடுவித்துள்ளனர். இதனை செஞ்சிலுவைச் சங்கம் உறுதி செய்துள்ளது.

Related Articles

Latest Articles