ஐ.நா. பொதுச்செயலாளருக்கு எதிராக இஸ்ரேல் போர்க்கொடி – பதவி விலகுமாறு வலியுறுத்து!

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரெஸ் பதவி விலகவேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

குறித்த ஸ்தாபனத்தை வழிநடத்துவதற்கு அவர் தகுதியானவர் அல்லர் என்று ஐ.நா நிறுவனத்துக்கான இஸ்ரேலியத் தூதர் கிலாட் எர்டன் அவரின் X (Twitter) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குட்டெரெஸுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பையும் அவர் இரத்துச் செய்துள்ளார்.

இதனையடுத்து ஹமாஸிற்குக் கண்டனம் தெரிவித்த குட்டெரஸ், காஸாவில் அனைத்துலகச் சட்டம் மீறப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் தெரிவித்தார்.

காஸா குடியிருப்பாளர்களைத் தென்பகுதிக்குச் செல்லுமாறு சொல்லிவிட்டுப் பின்னர் அதே பகுதியில் இஸ்ரேல் வெடிகுண்டு வீசியதை அவர் சாடினார்.

மேற்குக் கரையை நிர்வகிக்கும் பாலஸ்தீன அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆனால், ஹமாஸ் தரப்பு பங்கெடுக்கவில்லை.

நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் பாதுகாப்பு மன்றக் கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய ஐக்கிய நாடுகள் ஸ்தபனத்தின் தலைமைச் செயலாளர் குட்டெரஸ் இஸ்ரேலிலும் காஸாவிலும் சண்டை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார்.

Related Articles

Latest Articles