” ரணில் விக்கிரமசிங்க வலிந்துசென்று, மொட்டு கட்சியிடம் எந்தவொரு பதவியையும் கேட்கவில்லை. அக்கட்சியினரே பதவிகளை ஏற்குமாறு கோரினர். எனவே, நாடா, அமைச்சு பதவியா என்பது குறித்து அக்கட்சியே முடிவெடுக்க வேண்டும்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு பதவியில் இருந்து கெஹலிய ரம்புக்வெல்ல நீக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் மொட்டு கட்சி அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அத்துடன், மொட்டு கட்சிக்குரிய அமைச்சு பதவியை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய ஜனாதிபதியின் முடிவு தவறு எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாலித ரங்கே பண்டார,
” ஜனாதிபதி பதவியை ரணில் விக்கிரமசிங்க பலவந்தமாக பெறவில்லை. வெற்றிவை வைத்து எவரிடமும் கையேந்தவும் இல்லை. அவர்கள் (மொட்டு கட்சியின்) தாமாக அழைத்தே எமது ஜனாதிபதிக்கு பதவிகளை வழங்கினர். ஆக நாடா, அமைச்சு பதவியா என்பது குறித்து அக்கட்சியின் முடிவெடுக்க வேண்டும்.” – என்றார்.










