இஸ்ரேல் பிரதமர்போல் ஜனாதிபதி ரணில் செயற்படக்கூடாது – ராதா சீற்றம்

இலங்கை என்பது ஜனநாயக நாடாகும். எனவே இஸ்ரேல் பிரதமர்போல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படக்கூடாது – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

” பொலிஸ்மா அதிபர் ஒருவரைக்கூட நியமிக்க முடியாத வக்கற்ற நிலையிலேயே இந்த அரசு செயற்பட்டுவருகின்றது. பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள்மீது மென்மேலும் சுமைகள் திணிக்கப்படுகின்றன.

ஸ்தீரமற்ற ஆட்சியே உள்ளது, எனவே, அரச வளங்கள் விற்கப்படுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. குறிப்பாக 1894 இல் நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்ட தபால் நிலையத்தை விற்பனை செய்வதற்க முயற்சி எடுக்கப்படுகின்றது. இதனை நாம் எதிர்க்கின்றோம்.

ஒன்று தபால் நிலையம் விற்கப்பட வேண்டும், இல்லையேல் தபால்மா அதிபர் வீடு செல்ல வேண்டும் என ஜனாதிபதி எச்சரித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர்போல் செயற்பட ஜனாதிபதி முற்படக்கூடாது. இலங்கை ஜனநாயக நாடாகும்.

அதேவேளை நாம்200 நிகழ்வில் தமிழக முதல்வரின் உரை ஒளிபரப்படாமை தமிழர்களுக்கு அவமானமாகும்.” – எனவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles