பாடசாலை நேரத்தில் கஞ்சா போதைப்பொருள் பாவித்த இரு ஆசிரியர்கள் கைது

வெளிமடை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் சேவை நேரத்தில் இரண்டு ஆசிரியர்கள் கஞ்சா போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்த வேளையில் வெளிமடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிமடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பாடசாலையின் சங்கீத அறையை சோதனைக்கு உட்படுத்திய போது கஞ்சா பாவனையில் ஈடுபட்டிருந்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஆசிரியர்களிடம் இருந்து 1.9 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் இன்றைய தினம் வெளிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாக வெளிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles