முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கெஹலிய ரம்புக்வெல்ல இன்று காலை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு (Sri Lanka Rupavahini Corporation) அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு மாறாக, மேலதிகமாக ஆறு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தியதன் மூலம் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles