டிசம்பர் 15 மொட்டு கட்சிக்கு புதிய தலைவர்?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2ஆவது தேசிய சம்மேளனம் டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் மற்றும் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கரம்கோர்த்து இந்த சம்மேளனத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மொட்டு கட்சி அறிவித்துள்ளது.

மொட்டு கட்சிக்கு புதிய தலைவர் இதன்போது நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles