ஐசிசி இல் இருந்து இலங்கை கிரிக்கெட் ‘அவுட்’ – உறுப்புரிமை இடைநிறுத்தம்!

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடன் அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது சர்வதேச கிரிக்கெட் சபை.

சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டின் பொறுப்பு பாரியளவில் மீறப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இன்றைய அதிகாரிகள் மட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகள் சுயாதீனமாக நிர்வகிக்கப்படாமை, அதன் நிர்வாக செயற்பாடுகளில் அரசாங்கத்தின் தலையீடுகள் காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

இடைநீக்கத்தை நீக்க வேண்டுமானால் நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளும் முன்வைக்கப்படவுள்ளன.

அதேவேளை, ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையை கலைத்துவிட்டு, இடைக்கால நிர்வாகக்குழுவை அமைப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்தார். இதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் சபையின் தலைவர் உட்பட நிர்வாகக்குழுவினர் உடன் பதவி விலக வேண்டும் என இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles