‘தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்’ – ஜனாதிபதியிடம் திகா விடுத்துள்ள கோரிக்கை!

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மூன்று வருடங்களாக சம்பளம் அதிகரிக்கப்படாமல் உள்ளது. எனவே, சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுப்பதற்கு அரசு தலையீடு செய்ய வேண்டும். பெருந்தோட்ட நிறுவனங்களை அழைத்து பேச்சு நடத்தி அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.”

இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

” தோட்ட வீடமைப்பு திட்டத்துக்கு காணி வழங்குவதற்கு 4 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு 10 லட்சம்வரைதான் செலவானது. ஆனால் தற்போது ஒரு வீட்டை நிர்மாணிக்க 29 லட்சம் முதல் 30 லட்சம்வரை செலவாகும். எனவே, ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து எத்தனை வீடுகளை நிர்மாணிக்க முடியும்? பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றன. எனவே இது கண்துடைப்பு அறிவிப்பாகும்.” – எனவும் திகாம்பரம் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles