ஹாலிஎலயில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு!

கடும் மழை காரணமாக ஹாலிஎலயில் இருந்து கெடவல செல்லும் பிரதான வீதியில் கீரியகொல்ல பகுதியில் மரங்களுடன் மண்மேடு சரிந்து விழுந்ததால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது என்று ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

மண்மேட்டை அகற்றும் பணிகளில் ஹாலிஎல பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles