உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இலங்கையில் குற்றமிழைத்தவர்கள் தப்பவே முடியாது

இலங்கையில் குற்றம் இழைத்துவிட்டு வெளிநாடுகளில் பதுங்கி இருந்தாலும்கூட சட்டத்தின் பிடிக்குள் இருந்து அவர்களால் தப்ப முடியாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“கடந்தகால ஆட்சியாளர்களின் முறைகேடான – தவறான பொருளாதார செயற்பாடுகளால்தான் இலங்கையின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்கு சென்று , வரிசை யுகம் ஏற்பட்டது. கடைசியில் மக்கள் வீதிக்கு இறங்கி ஆட்சியாளர்களை விரட்டினார்கள்.

விமானக் கொள்வனவு, மருந்து கொள்வனவு என எல்லாவற்றிலும் மோசடி இடம்பெற்றுள்ளது. எனவே, விசாரணைகளின் முடிவின் சட்டத்தின் பிரகாரம் கைது இடம்பெறும். அப்போது கத்தி, கூக்குரல் இடுவதில் பயன் இல்லை.

ஷிரந்தி ராஜபக்ச விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார், அவர் வந்ததும் சட்டம் செயல்படும்.

டுபாய், தாய்லாந்தில் பதுங்கி இருந்தவர்களைக்கூட நாம் நாட்டுக்கு கொண்டுவந்துள்ளோம். இந்நாட்டு மக்களுக்கு குற்றம் இழைத்தவர்கள் வெளிநாட்டுக்கு சென்று இருந்தால்கூட சட்டத்தின் பிடிக்குள் இருந்து தப்ப முடியாது.”- என்றார் நளிந்த ஜயதிஸ்ஸ.

Related Articles

Latest Articles