வாழும் உரிமையை உறுதிப்படுத்திய எமது குடியுரிமையை பறிப்பதா? சபையில் பொங்கிய மஹிந்த

” பொருளாதாரம் தொடர்பில் எமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரிக்கின்றோம் . மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தியவர்கள் நாங்கள். ஆனால் உரிமையை பறிப்பது (சிவில் உரிமைகள்) பற்றி அவர்கள் (எதிரணி) கதைக்கின்றனர்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இன்று வாழ்க்கைச்செலவு அதிகரித்துள்ளது. மக்கள் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதை நாம் விரும்பவில்லை. நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதியிடம் உள்ளது என நம்புகின்றோம். அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு , அஸ்வெசும கொடுப்பனவு மும்மடங்காக அதிகரிப்பு உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களை வரவேற்கின்றோம்.

பொருளாதாரம் தொடர்பில் எமக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றோம். உரிமையை இல்லாது செய்வது பற்றி (பிரஜா உரிமை) கதைக்கின்றனர். திட்டமிட்ட அடிப்படையில் சேறுபூசுகின்றனர். இவ்வாறு சேறு பூசுபவர்களுக்கு பதிலளிக்க வேண்டுமா? சேறு பூசுபவர்களின் கரங்களில்தான் நிச்சயம் சேறுபடும்.

உரிமையை இல்லாது செய்வது பற்றி பேசுபவர்கள், மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தி, நாட்டுக்காக கடமையை நிறைவேற்றியுள்ளோம். இல்லாது செய்வதைவிட உரிமையை வழங்குவது கடினம் என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles