சவூதியில் மரண வேதனையை அனுபவித்த தாய் நாடு திரும்பினார்….!

சவூதி அரேபியாவுக்கு பணிப் பெண்ணாக சென்று பல்வேறு இன்னல்களை – சித்திரவதைகளை எதிர்கொண்டிருந்த இராமசந்திரன் தர்ஷனி இன்று (22) காலை நாடு திரும்பினார்.

மத்துகம, நெபட பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு நாடு திரும்பினார்.

தான் எதிர்கொண்ட இன்னல்கள் பற்றியும் அவர் விவரித்துள்ளார். அது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

” என்னை சலவை இயந்திரம் வைக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்து சென்று தாக்கினார்கள். கீழே தள்ளி தாக்கினார்கள். இரண்டு ஆணிகள் மற்றும் இரும்பு துண்டொன்றை கையில் கொடுத்து உட்கொள்ளுமாறு வற்புறுத்தினார்கள். இல்லையென்றால், தங்க நகைகளை திருடியதாக தெரிவித்து, பொலிஸில் பிடித்து கொடுப்பதாக மிரட்டினார்கள். நான் ஆணிகளை உட்கொண்டேன். ஒரு ஆணி தொண்டையில் சிக்கியது. எனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.” – என்றார்.

நிருபர் – கௌசல்யா

Related Articles

Latest Articles