பொருளாதாரக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உடன் துறக்க வேண்டும் – என்று வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பொதுமக்களின் நம்பிக்கையைமீறுவது மிக மோசமான விடயம். பொது மக்களின் நம்பிக்கையை மீறியவர்களின் பெயர்களை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அவ்வாறு உயர்நீதிமன்றத்தால் பெயர்குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு இந்த சபையில் அமர்வதற்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் இராஜினாமா செய்திருக்க வேண்டும். உண்மையான ஜனநாயக நாடுகளில் தீர்ப்பு வெளியாகி, மறுநாளே இராஜினாமா இடம்பெற்றிருக்கும். ராஜபக்சக்கள் அவ்வாறு செய்யவில்லை. எனவே, இப்போதாவது சட்டத்தை மதித்து, மஹிந்த ராஜபக்ச பதவி விலகவேண்டும். ” – என்றார்.










