தொழிலாளர் தேசிய சங்கத்தின் 16 வது பேராளர் மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி ஹட்டன் டி.கே. டபிள்யூ கலாசார மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பேராளர்கள் கலந்து
கொள்ளவுள்ள இந்த மாநாட்டில், உத்தியோகஸ்தர் சபை, நிர்வாக சபை, தேசிய சபை ஆகியவற்றின் உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் அமைப்பாளர்கள் , இணைப்பாளர்கள் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்படும்.
இந்த மாநாட்டில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், சங்கத்தின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் பேராளர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப் தெரிவித்தார்.










