2024 செப்டம்பர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் – என்று தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி சபை என மூன்று தேர்தல்களை நடத்துவதற்காக 31 பில்லியன் ரூபாகோரி வரவு- செலவுத் திட்டத்துக்கு யோசனை முன்வைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் பதவிகாலம் முடிவடைவதற்கு இரு மாதம் அல்லது ஒரு மாதத்துக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்தவகையில் 2024 இல் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதத்துக்கிடையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டரை வருடங்கள் கடந்துள்ளதால் நாடாளுமன்றத்தை எந்நேரத்தில் வேண்டுமானாலும் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. எனவே, அடுத்த வருடம் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியமும் உள்ளது. ” – என்றார்.










