பாடசாலை மாணவர்களுக்கு ‘சப்பாத்து வவுச்சர்’ வழங்கும் வேலைத்திட்டம் டிசம்பர் 4 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இவ்வாறு ஆரம்பமாகும் வேலைத்திட்டம் டிசம்பர் 27 ஆம் திகதிக்குள் முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் கூறினார்.
7 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் இதன்மூலம் பயன் அடைவார்கள். பின்தங்கிய பாடசாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.










