” யாழில் மலையகத்தை உணர்வோம்” எனும் தொனிப்பொருளின்கீழ் முன்னெடுக்கப்படவுள்ள விழிப்புணர்வு கண்காட்சி எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் 3 ஆம் திகதிவரை யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளது.
கண்காட்சி, சிறுவர் நாடகங்கள் , ஆவணப் படங்கள் மலையக மக்களின் வாழ்வியல் பகிர்வுகள், மலையக மக்களின் புள்ளி விபரப் பதிவுகள், அரசியல் பகிர்வுகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று யாழில் நடைபெற்றது. ஏற்பாட்டுக்குழுவின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.










