அண்ணன் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தம்பி – ஹாலிஎலயில் பயங்கரம்!

ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவத்தேகம புகையிரத பாதைக்கு அருகில் சகோதரர்கள் இருவருக்கு இடையில் இன்று ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி பலத்த காயமடைந்ததுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் பதுளை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் பதுளை அமுனுவெல்பிட்டிய பகுதியை சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட காணி தகராறினால் எற்பட்ட வாக்குவாதமே கத்தி குத்தில் முடிவடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையடைய சந்தேக நபராக காயமடைந்த நபரின் தம்பியான 43 வயதுடைய நபர் ஹாலிஎல பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சந்தேக நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles