இயலாமையுடைய நபர்களுக்கு டிசம்பர் முதல் சாரதி அனுமதி பத்திரம்!

இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் உணர்திறன் கொண்ட அரசாங்க பொறிமுறையை உருவாக்க உதவுமாறு இயலாமையுடைய நபர்கள், இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது, 1996 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை நீக்கும் சட்டமூலம் தொடர்பில் விரிவாகக் கருத்திற்கொள்ளப்பட்டதுடன், இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணி, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

உத்தேச சட்டமூலத்துக்கு அமைய, இயலாமையுடைய நபர்களுக்கு ஜனாதிபதி அல்லது பிரதமரின் தலைமையில் சுயாதீன ஆணைக்குழு நியமிப்பது தொடர்பில் இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். உத்தேச சட்டமூலம் தொடர்பில் விரைவாக நீதி அமைச்சருடன் கலந்துரையாடுவதாகத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் டலஸ் அழகப்பெரும, இது தொடர்பில் இயலாமையுடைய நபர்களின் பங்கேற்புடன் ஜனாதிபதியுடன் விரைவாகக் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த மாதம் முதல் (டிசம்பர்) இயலாமையுடைய நபர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க அனுமதி வழங்கியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும இதன்போது தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles