இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் சிரேஷ்ட இராஜதந்திரியான ஶ்ரீ சந்தோஷ் ஜா கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
நேற்று நாட்டை வந்தடைந்த சிரேஷ்ட இராஜதந்திரியான ஶ்ரீ சந்தோஷ் ஜா, கடமைகளை பொறுப்பேற்றதாக இலங்கைக்கான இந்திய தூதரம் தெரிவித்துள்ளது.
ஶ்ரீ சந்தோஷ் ஜா இதற்கு முன்னர் பெல்ஜியத்திற்கான இந்திய தூதுவராக கடமையாற்றியுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய கோபால் பாக்லே, ஆஸ்திரேலியாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
