இமயமலை பிரகடனம் பயங்கரம்! பதறுகிறார் விமல்!!

இமயமலை பிரகடனம் பயங்கரமானது என விமர்சித்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கையில் சமாதான உடன்படிக்கை தோல்வி அடைந்தது. இதனால் இலங்கையை பிரிக்க முடியாமல்போனது. ஆனால் சூடானை பிரித்தனர். இலங்கையை பிரித்திருந்தால், ஈழத்துக்கு அப்பாற்பட்ட பகுதியில்தான் தெற்காசியாவின் காசா பகுதி அமைந்திருக்கும். பாலஸ்தீன மக்களுக்கு இன்று நடப்பதுதான் சிங்கள மக்களுக்கு நடந்திருக்கும். இது தான் உண்மை கதை.

சமாதான முயற்சி ஏன் தோல்வி அடைந்தது என்பது குறித்து நோர்வே ஆராய்ந்தது. பேராசிரியர்களால் 140 பக்கங்களில் அறிக்கையொன்று வழங்கப்பட்டது. தோல்விக்கான காரணங்கள் அதில் விவரிக்கப்பட்டிருந்தன.

சமஷ்டி ஆதரவு போக்கில் இருந்த சந்திரிக்கா அம்மையாரின் ஆதரவை பெற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க அப்போதைய பிரதமர் (ரணில்) தவறியமை முதல் காரணம்.

இலங்கையில் பிக்கு சமூகத்தின் ஆதரவை திறட்ட தவறியமை இரண்டாவது காரணமாகும். அதாவது பிக்குகளின் ஆதரவை திரட்ட உரிய வேலைத்திட்டமொன்று இல்லாமை. வேலைத்திட்டமொன்று இருக்கவில்லை என முழுமையாக கூறவும் முடியாது. சில பிக்குகள் இருக்கவே செய்தனர்.

தற்போதுகூட டயஸ்போராக்கள், சில பிக்குகளை பிடித்துக்கொண்டு இமயமலை பிரகடனம் எனும் திட்டமொன்றை முன்னெடுக்கின்றனர். ரணில் கூறும் 13 இற்கு அப்பால் என்ற யோசனையை விடவும் பயங்கரமான திட்டத்துடன் மீண்டும் வந்துள்ளனர்.

ஜேவிபி மற்றும் ஹெல உறுமயவின் ஆதரவு இருக்கவில்லை எனவும் காரணம் கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று ஜேவிபியிடம் தேசியவாதம் இல்லை. ஊழல் எதிர்ப்பு பற்றி மாத்திரமே குரல் எழுப்புகின்றனர். சந்திரிக்காவும், ரணிலும்கூட நட்புடன் செயற்பட்டுவருகின்றனர். ” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles