நுவரெலியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக மத்திய நிலையம் திறப்பு

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான மத்திய நிலையம் எதிர்வரும் 07 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.

தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலைமையில் இதற்கான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 18 ஆம் திகதி சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தையொட்டி நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது   அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமை, இந்த நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நுவரெலியா மாவட்ட செயலகத்தின் 05 ஆம் மாடியில் இந்த மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக பணியகத்தின் பதிவுகளை பெற்றுக்கொள்ளல், வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைத்தல், பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து சேவைகளையும் வழங்கல் என்பன இந்த புதிய மத்திய நிலையத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ளன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles