புசல்லாவை, நியூபிகொக் தோட்டத்தில் 22.5 கிமீ பரப்பில் 7, 000 இற்கும் அதிகமானோர் பயனடையும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் குடிநீர் திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின்கீழ், உலக வங்கியின் உதவியுடன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாக குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

நியூ பீகொக், ஓல்ட் பீகொக், சப்லி, நயாபானவரை விஸ்தரிக்கப்படும் இத்திட்டம்மூலம், மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த சுத்தமான குடிநீர் என்ற வேண்டுகோள் நிறைவேற்றப்படவுள்ளது.
குடிநீர் திட்ட பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அப்பகுதிக்கு கண்காணிப்பு பயணமொன்றை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி மேற்கொண்டிருந்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி பொது செயலாளர் செல்லமுத்து, கண்டி மாவட்ட பணிப்பாளர் காசிராஜா, பணிமனை அதிகாரி சுந்தர், மாவட்ட தலைவர்கள், அமைச்சின் அதிகாரிகளுடன் உடன் சென்றிருந்தனர்.
