உரிய காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் எனவும், தற்போதைய காலவரையறைக்கு அமைவாக அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
அதற்குத் தேவையான நிதி 2025 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்படும்.
தேர்தலை நடத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பு என்றும் தேவையான சந்தர்ப்பங்களில் அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்துச் செயற்படும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் மேலும் அறிவித்துள்ளது.