அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார். இதனை நான் உறுதியாகவே கூறுகின்றேன் – என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
“ தேர்தல்கள் நடத்தப்படும் எனக் கூறப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக எதையும் இன்னும் கூறவில்லையே…” என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ரணில் விக்கிரமசிங்க அரசியல் இராஜதந்திரம் தெரிந்தவர். பதற்றப்படமாட்டார். உரிய நேரத்துக்கு உரிய வகையில் வருவார். அது குறித்து எவரும் சந்தேகம் கொள்ளவேண்டியதில்லை.
மே முதலாம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி பாரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. அப்போது பலர் எம்முடன் மேடையேறுவார்கள். இது அரசியலில் திருப்பமாக அமையும்.” – என்றார்.
