கம்பளையில் விபத்து: நால்வர் காயம்!

கம்பளை, நாவலப்பிட்டிய பிரதான வீதியில் ஜயமாலபுர பகுதியில் லொறியொன்று மின் கம்பதில் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

லொறியில் பயணித்த நால்வரே காயமடைந்த நிலையில் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,லொறிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் எக்கால்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Related Articles

Latest Articles