அலி கமேனிக்கு 3 மாதங்களின் பின் இறுதிச் சடங்கு!

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்காக, மூன்று நாட்கள் பொது இறுதிச்சடங்கு நடத்தப்படவுள்ளது.

ஈரான் அரச ஊடகங்கள் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தலைநகர் தெஹ்ரான், கொம் மற்றும் மஷாத் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் தெஹ்ரானில் 24 மணி நேர சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 2கோடி மக்கள் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மஷாத் நகரில் உள்ள புகழ்பெற்ற இமாம் ரெசா புனிதத் தலத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

ஈரானை சுமார் 37 ஆண்டுகள் வழிநடத்திய 86 வயதான ஆயதுல்லா அலி கமேனி, கடந்த பெப்ரவரி 28 அன்று மத்திய தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்ச்சூழல் காரணமாக இறுதிச்சடங்குகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் உள்ளது.

இந்நிலையிலேயே இறுதிச்சடங்கு நடத்தப்படுகின்றது. ரஷ்யா, சீனா உட்பட சில நாடுகளின் பிரதிநிதிகளும் இறுதிச்சடங்கில் பங்கேற்பார்கள் என தெரியவருகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles