“நாம் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகித்தாலும், சுயாதீனமாக இயங்குவதற்குரிய உரிமை எங்களுக்கு உள்ளது. இது தொடர்பில் எமக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையும் இருக்கின்றது” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்திட்டிருந்தாலும், அவர்களுடன் கூட்டு வைத்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்னும் அதில் கையெழுத்திடவில்லை.
இது குறித்து மனோ கணேசனிடம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தமிழ் பேசும் கட்சிகளின் புதிய கூட்டணி உட்பட சமகால விவகாரங்கள் தொடர்பில் மனோ கணேசன், ‘சிரச’ தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு:










