அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை நாடளாவிய ரீதியில் போராட்டம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிளைகளால் திட்டமிட்டபடி நாளை நாடளாவிய ரீதியில் போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு GMOA கிளைகள் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தன்னை பதவி விலக கோரவில்லை எதிர்காலத்திலும் கோரமாட்டார்-பிரதமர்
ஜனாதிபதி தன்னை பதவி விலக கோரவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்காலத்திலும் இவ்வாறு கோரமாட்டார் என தான் நம்புவதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாளை முதல் மின்வெட்டு அமுலாகும் விதம் தொர்பிலான அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் நாளை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு...
குறைந்த விலையில் இலங்கைக்கு எரிபொருளை வழங்கும் ரஷ்யா
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் குறைந்த விலையில் போதுமான எரிபொருளை ரஷ்யா வழங்குவதாக ரஷ்ய பிரதிநிதிகள் எழுத்து மூலம் தமக்கு அறிவித்துள்ளதாக எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
எனவே, மக்களுக்கும் நாட்டுக்கும்...
மலையகத்திலும் நீள்கிறது மண்ணெண்ணெய் வரிசை!
கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் நிரப்புவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இன்று (27.04.2022) காலையிலிருந்து விநியோகிக்கப்பட்ட மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்ள இன்று மதியம் 12 மணியை தாண்டியும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
இதில்...
‘அரசுக்கு எதிராக நாளை போராட்டம்! பெருந்தோட்டத்துறையும் முடங்கும்!!
அரச, அரச பங்குள்ள நிறுவனங்கள், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மற்றும் பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கங்கள் இணைந்து நாடு தழுவிய ரீதியில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நாளை மேற்கொள்ளவுள்ளன.
அத்துடன், எதிர்வரும் 06 ஆம் திகதி...
பதவி விலக ஜனாதிபதி மறுப்பு – சர்வக்கட்சி அரசுக்கு வியூகம் வகுப்பு
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசமைப்பதற்கு தான் கொள்கையளவில் இணங்கியிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி மற்றும் நாடாளுமன்றத்தில் சுயாதீன அணிகளாக செயற்படும் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதியால்...
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றால்? சஜித் வழங்கிய பதில்
பிபிசிக்கு வழங்கிய நேர்காணலில், " நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நீங்கள் தோல்வி அடைந்தால், அதை ஏறுக்கொள்வீர்களா? அப்போது அடுத்த கட்ட திட்டம் என்னவாக இருக்கும்?" என எழுப்பட்ட கேள்விக்கு சஜித் வழங்கிய பதில் வருமாறு,
"...
‘சர்வக்கட்சி இடைக்கால அரசுக்கு ஜனாதிபதி இணக்கம் – வெள்ளி விசேட கூட்டம்’
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி இடைக்கால அரசை அமைப்பதற்கு தான் இணங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆளுங்கட்சியினருக்கு ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தியுள்ளார்.
புதிய பிரதமர், அமைச்சரவை உட்பட...
உலக வங்கி 600 மில்லியன் டொலர் நிதி உதவி
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படும் என உலக வங்கியின்...











