எரிவாயு விநியோகம் தொடர்பாக லிட்ரோ, லாஃப்ஸ் நிறுவனங்களுக்கும் ஆலோசனை
உள்நாட்டு எரிவாயு விநியோகம் தொடர்பாக குறிப்பிட்ட இரு நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அண்மைய உத்தரவுக்கு அமைய மாத்திரம் எரிவாயு...
கொவிட் தொற்றால் மேலும் 18 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
மேலும் 430 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
நாட்டில் மேலும் 430 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 579,564 ஆக அதிகரித்துள்ளது.
ஜனவரி முதல் தடுப்பூசி அட்டை கட்டாயம்
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி அட்டை பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு...
இது தேர்தல் கூட்டணி அல்ல – மனோ
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
" 21 ஆம் திகதியை நோக்கி, இன்றைய தினங்களில், கட்சி தலைவர்கள் கையெழுத்திடக்கூடிய எமது பொது ஆவணம் பற்றி கட்சிகள் மத்தியில்...
‘காட்டிக்கொடுத்த கறுப்பாடுகள்’ – இ.தொ.காவை சாடும் ராஜாராம்!
" அரசின் பங்காளி கட்சியாக இருந்து, கைகட்டி – மௌனம்காத்து, ஒட்டுமொத்த சமூகத்தையுமே காட்டிக்கொடுத்து - கறுப்பாடுகளாக செயற்படுபவர்கள் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்காக கூவுகின்றனர். மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்." - என்று...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 10,144 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 10,144 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று(19) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்...
இரசாயன உர இறக்குமதியை தனியாருக்கு வழங்கிவிட்டு அரசாங்கம் பொறுப்பில் இருந்து விலக முடியாது
இரசாயன உர இறக்குமதிக்கான அனுமதியை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம் அரசாங்கம் தமது பொறுப்பில் இருந்து விலகி விட முடியாது என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சேதன பசளை அல்லது இரசாயன...
‘ஒமிக்ரோனை கட்டுப்படுத்த இலங்கையில் நடவடிக்கை இல்லை’ – குற்றச்சாட்டு முன்வைப்பு
'ஒமிக்ரோன்' வைரஸ் பிறழ்வு இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கு அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தவறான அரசியல் தீர்மானத்தால் தான் பாரிய அச்சுறுத்தல் இதற்கு முன்னரும் ஏற்பட்டது. இனியும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட இடமளிக்க...
இரண்டாவது தடுப்பூசியை பெற்றவர்கள் 3 மாதங்களின் பின்னர் பூஸ்டரை பெற்றுக்கொள்க – சந்திம ஜீவந்தர
இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பெற்று மூன்று மாதங்களின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர...










