மேலும் 508 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்
நாட்டில் மேலும் 508 கொவிட் தொற்றாளர்கள் இன்று(21) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 556,437 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
6 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன
யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் படகொன்றிலிருந்து 229 கிலோ 350 கிராம் நிறைகொண்ட கேரள கஞ்சா பொதிகள் கடற்படையினரால் இன்று(21) கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகளின் மொத்த பெறுமதி 6 கோடியே...
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 381 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 381 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 526,734 ஆக அதிகரித்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் சந்தைக்குப் பேக்கரி பொருட்களை வழங்குவதில் சிக்கல்
கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக பேக்கரி உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மா விநியோக நிறுவனங்களால் வழங்கப்படும் கோதுமை மாவின் அளவு சுமார் 25 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக...
80 வீதமாக குறைந்த காய்கறிகளின் வரவு
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் காய்காறிகளின் குறைந்துள்ளதாக அதன் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நேற்று நான்கரை லட்சம் கிலோ கிராம் காய்கறிக்கள் மாத்திரமே கிடைத்துள்ளன.
இது சாதாரணமாக சந்தைக்கு கிடைக்கும்...
சிறைக்கைதிகள் இடையே கொவிட் கொத்தணி
பதுளை சிறைச்சாலையில் 12 கைதிகளுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
95 கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் குறித்த...
வரவு செலவுத் திட்டத்தில் அரச அதிகாரிகள் புறக்கணிப்பு-தொழிற்சங்க ஒன்றியங்களின் கூட்டமைப்பு சிவப்பு எச்சரிக்கை
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச அதிகாரிகளை புறக்கணித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஎதிர்வரும் 29ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா அரச...
குறைவான வளப் பயன்பாட்டுடன் பாரிய வேலைத்திட்டங்கள்
கடந்த இரண்டு வருடகால ஆட்சிக் காலத்தில், சவால்களுக்கு மத்தியில் குறைவான வளப் பயன்பாட்டுடன் பாரிய வேலைத்திட்டங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடைமுறைப்படுத்தி வருகின்றார்.
நாடு பூராகவும் செயற்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் உள்ளிட்ட பாரிய வேலைத்திட்டங்களுக்காகப்...
இலங்கையில் அமுலாகும் புதிய நடைமுறை
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களுக்கு புதிய நடைமுறை அமுல் செய்யப்படவுள்ளது.
அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் பின்னர் வெளிநாட்டுக்கு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு 15,000 அமெரிக்க டொலர் காப்புறுதி வழங்கும் நடைமுறையை கட்டாயமாக்கும் சட்டம்...
நீர் கட்டணம் அதிகரிப்பு?
அடுத்தாண்டு வரை நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் செலவினம்,...





