‘மீண்டுமொரு கொரோனா அலை ஏற்பட்டால் அதற்கு எதிரணியே பொறுப்பு’
" நாட்டில் மீண்டுமொரு கொரோனா அலை ஏற்பட்டு, நாட்டை முடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை எதிரணி ஏற்க வேண்டும்."- என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று சபையில்...
ஆட்சி மாற்றம் குறித்து ராஜித வெளியிட்ட ‘பகீர்’ தகவல்!
" அரசிலிருந்து வெளியேறுவதற்கு பலர் தயாராகவே இருக்கின்றனர். தக்க தருணம்பார்த்து ஆட்சி ஆட்சி கவிழ்க்கப்படும். " - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில்...
மனோ கணேசனுக்கு கொரோனா தொற்று
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தனக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என கடந்த 11 ஆம் திகதி தனது சமூகவலைத்தளங்களில் மனோ...
கொவிட் தொற்றால் 23 பேர் பலி
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு
ஹட்டன், நோர்வூட் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்திற்கு அருகில் கையடக்க தொலைபேசி ஒன்றையும் ஒரு சோடி பாதணிகளையும் கண்ட மக்கள் இன்று (17) காலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதன் பின்னர்...
கொரோனா தொற்று உறுதியான 532 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 532 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 553,526ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் சிகரெட் விற்பனை குறையும்
இலங்கையில் சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலை அதிகரிப்பால் அரசாங்கத்திற்கு அடுத்த ஆண்டில் பெரும் அளவு வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை நாட்டில் சிகரெட் பாவனை எதிர்வரும் ஆண்டில் 25 மில்லியனால் குறைவடையும் என...
அதிக விலைக்கு மருந்து விற்பனையா? உடன் தகவல் வழங்கவும்!
அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் உயர்ந்துள்ளதாகவும், அவை விலை கட்டுப்பாடின்றி...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 448 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 448 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 525,188 ஆக அதிகரித்துள்ளது.
‘அச்சம் வேண்டாம் – போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது’
நாட்டில் தற்போது போதுமான எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாகவும், முத்துராஜவெல களஞ்சியத்திலிருந்து 40,000 மெற்றிக் டன் டீசல் தற்போது இறக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 36,000 மெற்றிக் டன் பெற்றோல்...






