இலங்கை – ஆப்கான் இன்று மோதல் – மழை குறுக்கிடும் சாத்தியம்!
டி20 உலகக் கிண்ணத்தின் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சுப்பர் 12 குழுக்கான போட்டியில் இலங்கை அணி இன்று களமிறங்கவுள்ளது.
பிரிஸ்பானில் நடைபெறும் இந்தப் போட்டி உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள இரு அணிகளுக்கும்...
நடைமுறை சாத்தியமான, சமமான வரிவிதிப்பு முறையை வலியுறுத்தும் ரவி கருணாநாயக்க
இலங்கையின் நிலையான வளர்ச்சித் திட்டத்தை நோக்கிய செயற்பாட்டுக்காக, நடைமுறை சாத்தியமானதும், எட்டக்கூடியதும், நியாயமானதும், சமமானதுமான வரி விதிப்பு முறைக்கு ஆதரவாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கருத்துத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக...
ஆஸி. அணி அபார வெற்றி – புள்ளி பட்டியலிலும் முன்னேற்றம்!
ஆஸ்திரேலியா அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா - அயர்லாந்து இடையேயான சூப்பர் 12 சுற்று போட்டி இன்று நடைபெற்றது.
அரையிறுதிக்கு முன்னேற பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக...
எரிபொருள் விலையில் மாற்றம்?
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு அல்லது நாளைய தினம் எரிபொருளுக்கான விலையில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
ஒவ்வொரு மாதத்திலும் முதலாம் திகதி எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில்...
கவிதை எழுதி முற்போக்கு கூட்டணியை கலாய்க்கிறார் திலகர்
தமிழ் முற்போக்கு கூட்டணியை மறைமுகமாக கலாய்த்துள்ளார் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக அரசியல் அரங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ்.
தமது முகநூல் பக்கத்தில் இது தொடர்பில் ஹெக்கூ பாணியில் கவிதையும் எழுதியுள்ளார்.
"கட்டி முடிக்கப்பட்டது...
அதிரடியாக சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் இராணுவத்தினர்
நாடளாவிய ரீதியில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கவும், அதில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே வழங்கிய பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் புலனாய்வுப்...
தொற்றா நோய்களால் நாட்டில் 83 வீத மரணங்கள் – சுகாதார அமைச்சு
நாட்டில் 83 வீதமான மரணங்கள் தொற்றா நோய்களினால் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களினால் உயிரிழப்பதாக தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சாந்த...
தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டும்- ஜனாதிபதி
போட்டிமிகு தேயிலைச் சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தில் இது மிகவும் இன்றியமையாதது எனக்கூறிய ஜனாதிபதி, ஆரம்பத்தில் தேயிலை தொழிற்துறையில்...
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாளை(01) முதல் எதிர்வரும் 04ஆம் திகதி வரை 2 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A முதல் W வரையிலான வலயங்களில் பகல் வேளையில் ஒரு...
இலங்கையின் முதலாவது இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு விமானப்படையின் ஆதரவு
பதுளை பொது வைத்தியசாலையில் இருந்து மூளைச்சாவு அடைந்த நபரின் சடலத்தை இலங்கை விமானப்படையினர் இன்று (31) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்
இலங்கை விமானப்பபடைக்கு சொந்தமான இலக்கம் 4 ஹெலிகொப்டர் பெல் 412...












