‘கோ ஹோம் கோட்டா’ – சாமிமலையிலும் போராட்டம்
மஸ்கெலியா, சாமிமலை பிரதேசத்தில் இன்று காலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாமிமலை நகரில் இருந்து கவரவில்லை சந்தி வரை பேரனியாக வந்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
எரிபொருள்...
கோ ஹோம் மஹிந்த – சபையில் முழங்கினார் விமல்
" பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான இந்த அரசு பதவி விலகி, சர்வக்கட்சி இடைக்கால அரசமைக்க இடமளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்நாட்டில் ஏற்படப்போகும் நெருக்கடி நிலைமைக்கு பொறுப்புக்கூறவேண்டும்."
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின்...
12 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது – வலுக்கிறது ஆதரவு
"கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் 12 ஆவது நாளாகவும் இன்று தொடர்கின்றது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி...
‘உணவு ஒவ்வாமை’ – 325 பேர் வைத்தியசாலையில் அனுமதி
உணவு ஒவ்வாமை காரணமாக சுமார் 325 தொழிற்சாலை ஊழியர்கள் இன்று கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோகல்ல முதலீட்டு வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் ஊழியர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரம்புக்கனை சம்பவம் குறித்து நாடாளுமன்றில் கடும் சர்ச்சை! சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!
ரம்புக்கனையில் மக்கள் போராட்டம்மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் சபையில் இன்று கடும் கண்டனம் தெரிவித்தன.
இது தொடர்பில் சபையில் எதிரணி உறுப்பினர்கள் கருத்துகளையும் முன்வைத்தனர்.
இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பில் சபையில் கடும் தர்க்கம்...
ரம்புக்கனை சம்பவம் – தமிழ் முற்போக்கு கூட்டணி கடும் கண்டனம்
ரம்புக்கனையில் மக்களுக்காக குரல் கொடுத்த மக்களுக்காக போராடிய மக்களின் உரிமைகளுக்காக களத்தில் இறங்கிய இளைஞர்களை சுட்டுக்கொன்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதோடு, அந்த குடும்பத்திற்கு மலையக மக்கள் சார்பாக ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்...
காலி வீதி முற்றாக முடக்கம்
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக பலபிட்டிய பிரதேசத்தில் காலி வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.
வீதியின் குறுக்கே 2 கார்கள் மற்றும் பஸ் ஒன்று குறுக்கே நிறுத்தப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் முன்னெடுத்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தால்...
‘ரம்புக்கனை சம்பவம் அரச பயங்கரவாதம்’ சஜித் கடும் சீற்றம்
" ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள்மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்."
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
அத்துடன், அரச பயங்கரவாதத்தை...
பெருந்தோட்ட மக்களும் போராட்டத்தில் குதிப்பு!
பசறை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூரி தோட்ட மக்கள் , பதுளை - பசறை பிரதான வீதியின் ஒரு பகுதியை மறித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
வீதியில் டயர்களை எரித்தும், பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியவாறு...
‘மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்’
ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக, மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள அலுவலகத்திலிருந்து விசேட குழு ஒன்று சம்பவ...