‘ரம்புக்கனை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தலவாக்கலையில் பாரிய போராட்டம்’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தலவாக்கலை நகரில் இன்று பாரியதொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட...
விநியோக நடவடிக்கைகளின் தாமதமே எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு காரணம்- காஞ்சன விஜேசேகர
எரிபொருட்களை ஏற்றிச் செல்லும் ரயில்கள் மற்றும் பவுசர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ், இராணுவம் மற்றும் விமானப்படையினரின் உதவியை கோருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிடும்...
நம்பிக்கையில்லாப் பிரேரணை எப்போது வரும்?
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த பிரேரணையில் நேற்றைய தினமும் சில எம்.பிக்கள் கையொப்பம் இட்டுள்ளனர். அந்த நடவடிக்கை தொடரவுள்ளது.
" தக்க தருணம் பார்த்து, ஆளுந்தரப்பின் ஆதரவும் எமக்கு கிடைக்கும்....
‘கோ ஹோம் கோட்டா’ – சாமிமலையிலும் போராட்டம்
மஸ்கெலியா, சாமிமலை பிரதேசத்தில் இன்று காலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாமிமலை நகரில் இருந்து கவரவில்லை சந்தி வரை பேரனியாக வந்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
எரிபொருள்...
கோ ஹோம் மஹிந்த – சபையில் முழங்கினார் விமல்
" பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான இந்த அரசு பதவி விலகி, சர்வக்கட்சி இடைக்கால அரசமைக்க இடமளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்நாட்டில் ஏற்படப்போகும் நெருக்கடி நிலைமைக்கு பொறுப்புக்கூறவேண்டும்."
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின்...
12 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது – வலுக்கிறது ஆதரவு
"கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் 12 ஆவது நாளாகவும் இன்று தொடர்கின்றது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி...
‘உணவு ஒவ்வாமை’ – 325 பேர் வைத்தியசாலையில் அனுமதி
உணவு ஒவ்வாமை காரணமாக சுமார் 325 தொழிற்சாலை ஊழியர்கள் இன்று கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோகல்ல முதலீட்டு வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் ஊழியர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரம்புக்கனை சம்பவம் குறித்து நாடாளுமன்றில் கடும் சர்ச்சை! சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!
ரம்புக்கனையில் மக்கள் போராட்டம்மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் சபையில் இன்று கடும் கண்டனம் தெரிவித்தன.
இது தொடர்பில் சபையில் எதிரணி உறுப்பினர்கள் கருத்துகளையும் முன்வைத்தனர்.
இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பில் சபையில் கடும் தர்க்கம்...
ரம்புக்கனை சம்பவம் – தமிழ் முற்போக்கு கூட்டணி கடும் கண்டனம்
ரம்புக்கனையில் மக்களுக்காக குரல் கொடுத்த மக்களுக்காக போராடிய மக்களின் உரிமைகளுக்காக களத்தில் இறங்கிய இளைஞர்களை சுட்டுக்கொன்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதோடு, அந்த குடும்பத்திற்கு மலையக மக்கள் சார்பாக ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்...
காலி வீதி முற்றாக முடக்கம்
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக பலபிட்டிய பிரதேசத்தில் காலி வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.
வீதியின் குறுக்கே 2 கார்கள் மற்றும் பஸ் ஒன்று குறுக்கே நிறுத்தப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் முன்னெடுத்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தால்...













