ஐ.நா. கூட்டத்தொடரில் புதனன்று ஜனாதிபதி உரை!
அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார்.
எதிர்வரும் 23 முதல் 29 ஆம் திகதி வரை ஐ.நா. கூட்டத்தொடர் நடைபெறுகின்றது. இத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார...
கம்பளையில் கார் விபத்து: இருவர் காயம்!
கம்பளை, நாவலப்பிட்டிய வீதியில் கம்பளை நகர் பகுதியில் காரொன்று இன்று காலை விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் பாதுகாப்பு கடவையில் மோதியுள்ளது. காருக்கு பகுதியளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த...
கம்பளை, கண்டி வீதியில் கார் விபத்து: ஒருவர் காயம்!
கம்பளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார், வெலிகல்ல பகுதியில் விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்துள்ளார்.
அவர் சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. கம்பளை பொலிஸார்...
திலீபனின் வரலாற்றை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம் நல்லூரில் திறப்பு!
திலீபனின் வரலாற்றை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம் நல்லூரில் திறப்பு!
தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் 'பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன்...
மரக்கறி விலைப்பட்டியல் (21.09.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் கைது!
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே, நீண்ட நாட்களாக போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்ட...
யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான காணிக்குள் துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிப்பு!
யாழ். மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் நேற்று ரி56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து,...
நடு வீதியில் பற்றி எரிந்த ஆட்டோ!
நாவலப்பிட்டியவில் இருந்து ஹட்டன் நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஆட்டோவொன்று நேற்று மாலை 6 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
ஆட்டோவில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்வதற்காக அதனை ஓட்டுநர் செலுத்தி சென்ற நிலையிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆட்டோ...
நீருக்குள் விழுந்த சிறுத்தை பாதுகாப்பாக மீட்பு!
அக்கரப்பத்தனை, ஆக்ரா கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தையொன்று, நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
சிறுத்தையை கண்ட பொதுமக்கள் அது பற்றி அக்கரப்பத்தனை...
இந்த அரசுக்கு வாக்களித்த அரச ஊழியர்கள்இன்று வீதியில்
"தற்போதைய அரசை ஆட்சிப்பீடமேற்றுவதற்கு அரச ஊழியர்கள் பெரும் பங்காற்றியிருந்தாலும், இன்று மின்சார சபை ஊழியர்கள் வீதியில் விடப்பட்டுள்ளனர். தபால் வாக்குகளில் அதிக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுத் தந்த அரச ஊழியர் இன்று தமது...













